Saturday, April 14, 2018

தமிழ் உணர்வு என்ற போர்வையில் தேச விரோத செயல்கள்: பொன்.ராதா ஆவேசம்!

துரோகத்தை மறைக்கவே பிரதமருக்கு எதிராக தமிழக அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்திய போராட்டம் கண்டிக்கத்தக்கது. பொய்யை சொல்லி திமுக ஆட்சி செய்து வந்தது. தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள். சாதி, மத ரீதியாக ஆட்சிக்கு வந்தவர்கள். இப்போதும் பிரித்தாளும் சூழ்ச்சி கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்.

தமிழக மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். யார் கெட்டாலும் ஆட்சிக்கு வர வேண்டும் என சில அரசியல் கட்சிகள் துடிக்கின்றன. ஆனால் நாங்கள் நாடு நல்லா இருக்கனும் என நினைக்கிறோம்.

தமிழ் உணர்வுகள் இருப்பதாக சொல்லிக்கொண்டு சிலர் பேசும் வார்த்தைகள், தமிழனை அவமானப்படுத்துவதாக உள்ளது. ஐ.பி.எல்., கிரிக்கெட் பார்க்க வந்த பெண்களை சிலர் கொச்சையாக பேசி இருக்கின்றனர். எனது சகோதரியை, எனது தாயை இழிவாக பேசுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? தமிழ் உணர்வு என்ற போர்வையில் சிலர் மக்களை முட்டாளாக்கி வருகின்றனர்.

காவிரியில் நமது உரிமைகள் நிலை நாட்டப்பட வேண்டும். நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் வர வேண்டும். பிரதமர் மோடி புதிதாக திட்டமிடும் கோதாவரியில் இருந்து வரும் நீரை தாமிரபரணி வரை கொண்டு செல்ல வேண்டும். தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் நதிகள் இணைக்கப்பட வேண்டும். இதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 3 ஆயிரம் டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலக்கிறதே யாராவது இதனை பெற 50 ஆண்டுகள் முயற்சி செய்தார்களா ? தமிழ் உணர்வு என மக்களை ஏமாற்றும் கட்சிகள் தமிழகத்தில் செயல்படுகிறது.
பயங்கரவாதிகள்

தமிழர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்த பலர் முயற்சி செய்கின்றனர். தமிழ் சமுதாயத்தை பிரிக்கும் சூழ்ச்சியை முறியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். மோடிக்கு எதிரான போராட்டம் நடத்துவதில் கிறிஸ்தவர்கள் பலர் இருக்கின்றனர் என்று சொல்ல முடியாது. தமிழ் நாட்டுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வர கூடாது என ஒரு கூட்டம் செயல்படுகிறது.

தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகள் பல உருவங்களாக வளர்ந்து வருகின்றனர். பலர் பல அமைப்புகளில் பயங்கரவாத அதாவது தேச விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை பயிற்சி களமாக மாற்றி வருகின்றனர். 28 ஆயிரம் கோடி செலவில் துறைமுகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க யார் அவர்கள் ? எல்லோரும் ஆதரவு கொடுத்து தற்போது வேண்டாம் என கூறுவதற்கு காரணம் என்ன ? இவ்வாறு பொன்.ராதா கூறினார்.

No comments:

Post a Comment