Tuesday, March 7, 2017

தேசத்தைப் பங்குபோட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது :முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

தேசத்தைப் பங்குபோட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டை நேசிக்கும் நாம் எவ்வாறு நாட்டை துண்டாடும் நகர்வுகளுக்கு ஆதரவாக கை தூக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அகலவத்தையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எப்.சி. ஐ.டி., நீதிமன்றம், சிறைச்சாலை ஆகியன இருந்தால் மாத்திரம் ஆட்சியை நடத்தலாம் என எண்ணுகின்றனர். உடல் முழுவதும் குரோதம் வைராக்கியத்தை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகின்றனர். நாட்டை துண்டாடும் பௌத்தத்தை அழிக்கும் அரசியல் அமைப்பிற்கு எம்மால் எந்த சந்தர்ப்பத்திலும்
கை தூக்க முடித்து. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் துணை போகும் கொள்கையில் நாம் துணை போக மாட்டோம்.
எம்மை பழிவாங்கவும் தண்டிக்கவுமே இந்த ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். இன்று உருவாக்க முயற்சிக்கும் புதிய அரசியல் அமைப்பில் பெளத்த மதத்தை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. சிங்கள தேசம் பங்குபோட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு எவ்வாறு நாம் இடமளிக்க முடியும். இந்த நாட்டை நேசிக்கும் நாம் எவ்வாறு நாட்டை துண்டாடும் நகர்வுகளுக்கு ஆதரவாக கை தூக்க முடியும்.
இந்த ஆட்சியாளர்களிடம் பழிவாங்கும் பண்பும் எம்மை தண்டிக்க வேண்டும் என்ற ஒரே எதிர்பார்ப்பும் மட்டுமே உள்ளது. இந்த பழிவாங்கும் தன்மைகளின் மூலமாக நாட்டை ஆட்சிசெய்ய முயற்சிக்கின்றனர். இவர்கள் எந்த முயற்சிகளை முன்னெடுத்தாலும் எம்மை தண்டிக்க எமக்கு எதிராக எந்த குற்றங்களை சுமத்தினாலும் இவர்களால் அவற்றை நிருபிக்க முடியாது. எம்மை குற்றவாளிகள் ஊழல் மோசடிக் காரர்கள் என கூறிக்கொண்டு மக்களின் பணத்தை பூரணமாக கொளையடித்துள்ளனர். மத்திய வங்கி கொள்ளைகள் மூட்டப்பட்டு வருகின்றது. நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கி வருகின்றது. ஊழல் மோசடிகள் ஆயுத கலாசாரம் பரவி வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment