Tuesday, March 21, 2017

நாளையதினம் ஜெனீவா ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் குளோபல் இலங்கை அமைப்பு!

புலிகளுக்கு எதிராக 30 வருட யுத்தத்தை நிறைவு செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கிய இராணுவத்தினருக்கு சர்வதேச நீதிமன்றில் தண்டணை வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
 
இதற்கு எதிராக நாளையதினம் ஜெனீவா ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட குளோபல் இலங்கை அமைப்பு தீர்மானித்துள்ளது.
 
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் இராணுவத்தினர் மீது சுமத்தும் போர்க்குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு வெளியிடப்படவுள்ளது.
 
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு, இலங்கையின் உள்ளக பிரச்சினையில் தலையிடுவதற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்ன இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
 
இதேவேளை, தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணத்தில் ஈடுப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளார்.
 
சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் வாழும் இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் வசந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment